இதுவரை இல்லாதது.. பிக்பாஸ் விதிகளில் புதிய மாற்றம்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

943

பிக்பாஸ் விதிகளில் புதிய மாற்றம்.

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் வெளியுலக தொடர்பு இல்லாமல் தனியாக வீட்டில் வைக்கப்படுவார்கள். அவர்களே வீட்டில் சமைப்பது உட்பட அனைத்து பணிகளையும் செய்யவேண்டும்.

விரைவில் ஹிந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் துவங்கவுள்ளது. அதை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியின் டீசரில் காட்டப்பட்டுள்ள ஒரு விஷயம் ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்துள்ளது.

நிகழ்ச்சியில் பிரபங்கள் மட்டுமின்றி ஒரு நாய் குட்டியும் வீட்டுக்குள் செல்லவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் தற்போது இப்படி ஒரு மாற்றம் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.