“என்னயா டெனட் படம் மாதிரி போட்டு குழப்புறீங்க?” தெறி மாஸாக வெளியான ‘மாநாடு’ பட டிரைலர்… எகிறும் எதிர்பார்ப்பு…!!

479

மாநாடு..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநாடு படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்டகாசமான இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இந்த படம் வருகிற தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.