அமித் பார்கவ்-சிவரஞ்சனி தம்பதிக்கு குழந்தை பிறந்தது : சிசுவின் புகைப்படத்தை வெளியிட்ட தம்பதியினர்!!

1265

கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் அமித் பார்கவ்.

சீரியலில் இனி நடிக்க போவதில்லை, புதுவித வேலைகள் செய்ய இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்போது படங்கள் நடித்து வருகிறாரா அல்லது வெப் சீரியஸ் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

ஆனால் சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி கூறியிருந்தார், அதாவது அவரது மனைவி சிவரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த ஜோடிக்கு கடந்த மே 7ம் தேதி அக்ஷய திருதியை அன்று பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இதனை அமித் பார்கவே டுவிட்டரில் கூறியுள்ளார்.