தங்களை அசிங்கமாக சொன்ன புஷ்பவனம் குப்புசாமிக்கு பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்!!

1359

கிராமிய பாடல்கள் பாட இப்போது நிறைய கலைஞர்கள் வந்துவிட்டார்கள். ஆனால் முன்பெல்லாம் அதுபோன்ற பாடல்கள் என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் தான்.

சமீபத்தில் அவர் சூப்பர் சிங்கரில் கலக்கும் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் இரட்டை அர்த்த பாடல்களை மேடையில் பாடுவதாகவும் குறிப்பாக செந்தில் மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஆபாச செய்கை செய்கிறார் என்றார்.

இதற்கு செந்தில், பாடல்களில் இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்களே இல்லை என்றும் எங்கள் மூத்த கலைஞர்கள் பாடிய பாடல்களை தான் பாடி வருகிறோம். ஒருவேளை அதில் ஆபாச வார்த்தைகள் இருந்தால் அந்த வார்த்தைகளை நீக்கிவிட்டு வேறொரு வார்த்தை போட்டு தான் பாடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.