ஐஸ்வர்யா ராயின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?

856

தகுதியும் திறமையும் அழகாக சங்கமித்த நடிகை ஐஸ்வர்யா ராய். அழகி என்றவுடன் அனைவரும் உடனே சொல்லும் பெயர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகி பட்டம் பெற்ற இவர், 45 வயதாகிவிட்டபோதிலும் இன்றும் இளமையுடன் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் பிங்க், பிரவுன் கலர் லிப்ஸ்டிக்குளை தனது சருமம் மற்றும் உடைக்கு ஏற்றது போலவும், கண்களுக்கும் போடுவாராம்.

சருமத்திற்காக வெள்ளரிக்காய், கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் கலந்து மாஸ்க்கையும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்காக யோகர்ட்டை பயன்படுத்துவதுடன் அடிக்கடி தனது முகத்தை சுத்தமான நீரில் கழுவிக் கொள்வாராம்.

ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப்பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப்புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும் முன் மேக்கப் கலைக்க ஐஸ்வர்யா பயன்படுத்துவது சுத்தமான பசும் பால்.

ஐஸ்வர்யா ராயின் உணவு ரகசியம் : ஐஸ்வர்யா ராய் தனது உணவில் வேகவைத்த உணவுகள், நார்சத்து மிகுந்த உணவுகள் ஆகிய உணவுகளை சாப்பிடுவாராம்.

அதிலும் பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகமாக அடிக்கடி எடுத்துக் கொள்வதுடன், வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவாராம்.

மேலும் இவர் உடலையும் மனதையும் சீரான முறையில் பராமரிக்க, தினமும் தவறாமல் யோகா செய்து வருகிறார்.