பிக்பாஸ் சீசன் 3க்காக அட்டகாசமாக போட்டோசூட் நடத்திய கமல்ஹாசன் வைரலாகும் புகைப்படம்!!

1180

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டும் வேற லெவலுக்கு சென்றது.

கடந்த இரண்டு சீசனையும் நம்மவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் என்னவோ, பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில், இன்று பிக்பாஸ் விரைவில் என்று ப்ரோமோ வீடியோ போல் ஒரு வீடியோவினை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

அதில், கமல்ஹாசன் பார்ப்பதற்கே அட்டஹாசமாக இருந்தார். இதையடுத்து, அடுத்த ப்ரோமோ வீடியோவிற்காக கமல்ஹாசன் போட்டோசூட்டுக்கு போஸ்கொடுத்த புகைப்படம் தற்போது அதிகளவில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள், விருமாண்டி ரிட்டன் அதே முறுக்கு மீசையுடன் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.