வலிமை என்பது அடுத்தவன காப்பாற்றத்தான்.. அழிக்க இல்ல : வெளியானது வெறித்தனமான வலிமை டிரைலர்!!

171

வலிமை ட்ரெய்லர்..

அஜித் குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் எந்த அளவு இருந்தது, இருக்கிறது என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அஜித்குமாரின் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு, பொது இடங்களில் அவரது ரசிகர்கள் செய்த அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல, கிரிக்கெட் மைதானம், அரசியல்வாதிகள் என அவரது ரசிகர்கள் அடித்த லூட்டிக்கு முடிவு வந்துள்ளது.

பிரபலங்களும் வலிமை பட அப்டேட் கேட்டு, அவ்வப்போது, சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர். இவ்வளவு எதிர்பார்ப்புகள் எல்லாம், அஜித் என்ற ஒன்றை மனிதனுக்குத்தான். இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் என வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வந்தது.

என்ன தான் படக்குழுவினர் தொடர்ந்து ஏதாவது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தாலும், வலிமை அப்டேட் கேட்பதை மட்டும் அஜித் ரசிகர்கள் நிறுத்தவேயில்லை.

டிரைலரை எப்போது ரிலீஸ் செய்ய போகிறீர்கள், ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணுங்க என அந்தபடத்திள் போனி கபூரை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு, ஒரு பாடு படுத்தி விட்டனர்.

ரசிகர்களின் இந்த ஓயாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான், தற்போது வெளியாகியுள்ள டிரைலர். அஜித் நடந்தாலும், பார்த்தாலும் கூட, அவரது, ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி விடுவார்கள், அப்படி இருக்க தற்போது, டிரைலர் வெளியாகியுள்ளது.

அதில் ஏழைனா சும்மா விடுவார்களா என்ன? அஜித் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் சும்மா புகுந்து விளையாடுகின்றனர். ஏழையா இருந்து உழைச்சு சாப்பிடுறவங்க எல்லாத்தையும் கேவலப்படுத்தாத,

வலிமை என்பது அடுத்தவன காப்பாற்றத்தான்.. அழிக்க இல்ல போன்ற வசனங்கள் அஜித் பேசியுள்ளார். ட்ரெய்லரை ரசிகர்களை அதகளப்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.