காஜல் அகர்வால் செய்த காரியத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

1111

குயீன் படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார் காஜல் அகர்வால். அவர் தற்போது சீதா என்கிற தெலுங்கு படத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காஜல் ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு நான் சென்றேன். அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் படிக்க பள்ளிக்கூடம் இல்லாததை பார்த்தேன். அவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்ட பணம் கொடுத்தேன்.

என்னை பார்ப்பவர்கள் அனைவரும் திருமணம் எப்பொழுது என்று கேட்கிறார்கள். நான் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

திருமணம் செய்ய முடிவு செய்யும்போது அது குறித்து நானே அறிவிப்பு வெளியிடுகிறேன். தற்போது பாரீஸ் பாரீஸ் பட ரிலீஸுக்காக காத்திருக்கிறேன் என்றார்.