பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை டாப்ஸி : யார் அவர் தெரியுமா?

809

நடிகை டாப்ஸி ஆரம்பத்தில் கதை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி என்ற ரூட்டில் சென்றவர். பின் சுதாரித்துக் கொண்டு தனக்கு நடிப்பை வெளிக்காட்ட முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் ஹிந்தியில் வந்த பிங்க் என்ற படத்தின் ரீமேக்கில் தான் இப்போது அஜித் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு, தமிழை தாண்டி தற்போது பாலிவுட் படங்களில் தான் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார், அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்த நடிகர்களில் யாரை திருமணம் செய்ய ஆசை என கேட்டுள்ளனர். அதற்கு டாப்ஸி நடிகர் விக்கி கோஷலை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.