பிக் பாஸ் ஜூலியால் பறிபோன வாய்ப்புகள் : போராடி ரீஎண்ட்ரி ஆகும் பிரபல சின்னதிரை நடிகை!!

1012

சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் என்றாலும் சில காலமாக சீரியல்களில் வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தார் நடிகை ஜூலி.

இவர் ஒரு முன்னணி தொலைக்காட்சியின் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மற்றொரு டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் காரணமாக சீரியல்களில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன் என தெரிவித்துள்ளார் ஜூலி.

மேலும் பிக் பாஸ்’ ஜூலியால் தன் வாய்ப்புகள் பறிபோனதாக அவர் இதற்கு முன்பு குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு நீண்ட காலம் வீட்டில் இருந்த அவர் தற்போது பல டிவி சேனல்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘சத்யா’ சீரியலில் சித்தி ரோலில் நடிக்க வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.