அமலா பால்..
இந்தி நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தி வெப் தொடரில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.
1970 களில் ஒரு போராடும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் ஒரு சிறந்த நடிகைக்கும் இடையிலான உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தார் நடிகை அமலா பால். இதனால் கடும் சர்ச்சைக்குள்ளானார் அமலா பால். அதன்பிறகு தமிழ் சினிமாவில் நடிகை அமலா பாலுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது, தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் ‘கடாவர்’ ஆகிய திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. இதனிடையே, சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸ்களின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால்.
தற்போது, பாலிவுட்டில் 1970களில் பிரபலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. ரஞ்சிஷ் ஹாய் சாஹி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரில் நடிகை பர்வீன் பாபியாக அமலா பால் நடிக்கிறார்.
மேலும், தாஹிர் ராஜ் பாசின் மற்றும் அம்ரிதா பூரி ஆகியோர் மற்ற கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த வெப்சீரிஸ் வூட் ஓடிடி தளத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாக உள்ளது.
இந்தி சினிமாவில் கவர்ச்சியான நடிகைகளில் ஒன்றாக கருதப்பட்டவர். பர்வீன் பாபி. இந்த வெப் தொடரில் அமலா பாலின் கவர்ச்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போவது மட்டும் நிச்சயம். இந்த வெப்சீரிஸின் மூலம் நடிகை அமலா பால் இந்தி வெப் சீரிஸ் உலகிலும் தடம் பதிக்கிறார்.