சினேகா..
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.
அப்போது இருவருக்கும் காதல் உண்டானதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜிம்மில் டைட்டான உடையில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.