ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன சுஜா வருணி லேட்டஸ்ட் போட்டோஸ்!!

824

சுஜா வருணி..

நடிகை சுஜா வருணீ நடன குழுக்களில் டான்சராக அறிமுகம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடனம், குணச்சித்திர வேடம் என வெள்ளித்திரையில் தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டவர் .

இவரின் இயற்பெயர் சுஜா நாயுடு என்பதை திரையுலக பயணத்தின் போது சுஜா வருணீ என மாற்றி அமைத்து கொண்டார் . 15 வயத்திலேயேத் திரையுலகில் கால் பதித்தார் .படிக்கும் போதே குடும்ப சூழ்நிலை காரணமாக திரைத்துறையில் பணியாற்றினார்.

தற்போது அம்மா மற்றும் தங்கையோடு வசித்து வரும் இவர் பல காதல் தோல்விகளை சந்தித்தவர். 2000 களில் கவர்ச்சி மிகுந்த பாடல்களுக்கு நடனமாடி வந்தார்.இது சுஜாவை கவர்ச்சி நடிகையாக அடையாளம் காட்டியது திரையுலகிற்கு.

ஆரம்ப காலகட்டத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால் சுஜாவிருக்கு திரையுலகம் தன்னை பற்றி நினைப்பதை புரிந்து கொள்ள இயலாமல் போய்விட்டது. 2017 ஆம் ஆண்டு இரவுக்கு ஆயிரம் கண்கள் தமிரனுடைய ஆன் தேவதை ,

அருண் விஜயின் குற்றம் 23 மற்றும் சத்ரு இந்த படங்களை எல்லாம் நிறைவு செய்துவிட்டு தான் பிக் பாஸ்ஸில் நுழைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சுஜா,

இதுவரை நான் என் வாழ்க்கையில் ஒரு வெற்றியை கூட சந்தித்தது இல்லை என்றும் சந்தித்தது எல்லாம் துன்பங்களும், பிரச்சனைகளும் மட்டும் தான். இந்த நிகழ்ச்சிக்கு வருவதன் மூலம் பலபேருடன் சேர்ந்து வாழ போகிறேன். அதற்காக தற்போது நான் தயாராக இருக்கிறேன் என கூறினார்.

மேலும் இதுவரை ஒரு சாதாரண பெண்ணாக வெளியில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததற்கும் , உள்ளே ஒரு போட்டியாளராக நுழைவதற்கும் நிறைய மாற்றத்தை உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.