நடிகை வேதிகா..
தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை வேதிகா.
மதராஸி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர், ராகவா லாரன்ஸ் உடன் நடித்த முனி படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, சக்கரக்கட்டி, காளை,
மலை மலை உள்ளிட்ட படங்களில் சாதாரணமாக நடித்து வந்த இவர், பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் விருதுகளையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.
இறுதியாக, காஞ்சனா 3ல் நடித்த வேதிகா, ‘தி பாடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். மேலும், தமிழில், விநோதன், ஜங்கிள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது, தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் கவர்ச்சி குறையாது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவருக்கு பாலோயர்ஸ் மற்றும் ரசிகர் பட்டாளம் அதிகம்.