பூஜா ராமசந்திரன்..

SS மியூஸிக்’ல் VJ வாக இருந்து 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தவர் பூஜா ராமசந்திரன்.

கோயம்புத்தூரில் பட்ட படிப்பை முடித்த பூஜா, மிஸ். கோயம்புத்தூர் பட்டம் வென்றவர். இவர், PCO, கானா பஜானா, கனெக்ட், சினிமா சென்ட்ரல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

ஸ்டார் விஜயில் ஒளிபரப்பான திரில்லர் தொடரான ‘காஞ்சனா’ என்னும் தொடரில் நடித்தார்.

அதன் பின்னர், காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிசா, நண்பேன்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர், சில தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, தன்னுடன் வேலை பார்த்த Craig என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு 7 ஆண்டுகள் ஒன்றாக இருந்தார்கள்.

பின்னர், சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

தற்போது, ஜான் கொக்கனை (சார்பேட்டா பரம்பரை புகழ் வேம்புலி) 2வது திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோ பதிவிட்டு வரும் பூஜா, தனது புகைப்படத்தையும் கவர்ச்சி குறையாது பதிவிட்டு வருகிறார்.



