நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நடிகர் சஞ்சீவ் : பிரச்சனைக்கான தீர்வு தெரியாமல் சோகத்தில் குடும்பம்!!

1173

ராஜா ராணி என்ற சீரியல் பிரபல தொலைக்காட்சியில் படு பிரபலம். சீரியல் வெற்றி காரணமாக அதில் நடிப்பவர்களும் மக்களிடம் அதிகம் நெருங்கிவிட்டார்கள்.

அவர்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்போது இந்த சீரியலில் இருந்து சிலர் படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றனர். அந்த சீன்கள் எல்லாம் முடிந்துவிட்டது.

ரீலில் இருந்து ரியல் ஜோடியாக மாறியுள்ள சஞ்சீவ்-ஆல்யா மானசா ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் சஞ்சீவ் பேசும்போது, எனக்கு சிறுவயதில் இருந்தே ஒரு பிரச்சனை இருக்கிறது, அதற்கு பெயர் அல்டோஃபோபியா என்று பெயர், அதற்கு என்ன அர்த்தம் என்றால் உயரத்தைக் கண்டு பயப்படுவது தான்.

இந்த பிரச்சனையால் சஞ்சீவ் பல கிண்டல்களை சந்தித்துள்ளாராம். சிங்கப்பூரில் ராஜா ராணி படப்பிடிப்பில் உயரத்தில் நடிக்கும் காட்சி வர அப்போது இந்த விஷயம் குறித்து இயக்குனரிடம் கூறினேன். அதைக்கேட்டு அவர் இதையெல்லாம் சரி செய்துவிட்டு அல்லவா நீங்கள் நடிக்க வந்திருக்க வேண்டும் என்று திட்டினார்.

இந்த பிரச்சனையால் நான் பட்ட முதல் அவமானம் அது என வருத்தமாக பேசியுள்ளார். உடனே ஆல்யா மானவா இந்த பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதே தெரியவில்லை, நண்பர்களிடம் கேட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.