செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்ட அயோக்கியா ஹீரோயின்!!

1124

சமீபத்தில் வெளிவந்த அயோக்யா படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் விஷால்-ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராசி கன்னாவிற்கு பிரபல நடிகை ரவீனா தான் டப்பிங் செய்திருந்தார். ஆனால் அயோக்யா படத்தில் முடிவில் வரும் end creditsல் டப்பிங் பேசியவர்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லையாம். அதை ட்விட்டரில் குறிப்பிட்டு ரவீனா வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதை பார்த்த ராசி கண்ணா ரவீனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். படக்குழு செய்த தவறுக்கு நடிகை மன்னிப்பு கேட்டிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.