ஏடாகூடமாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மேகா ஆகாஷ்!!

902

மேகா ஆகாஷ்..

சமீபகாலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் கதையின் நாயகியாக சோலோ ஹீரோயின் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா, சமந்தா போன்ற டாப் நடிகைகள் இந்த வகை கதைகளை தேர்வு செய்து நடிப்பதோடு அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

அதே சமயம் ஹீரோவை போல படங்களில் ஹீரோயின்களும் தம் அடிப்பது சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளில் எந்த வித தயக்கமும் இன்றி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு இளம் நடிகை சிகரெட் பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நடிகை வேறு யாருமல்ல கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ் தான். இந்த படத்தை தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ் கைவசம் நான்கு படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தை மேகா ஆகாஷின் தாய் பிந்து ஆகாஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மேகா ஆகாஷ் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதனால் இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.