அமைரா தஸ்தூர்..

ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமாகி பிரபலமான நடிகைகளாக பார்க்கப்பட்ட பல நடிகைகள் இன்று வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியால் இருக்கின்றனர்.

அந்த வகையில் தனுஷின் அனேகன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்த நடிகை அமைரா தஸ்தூர் முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை கொடுத்தார். பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் புது நடிகைகளின் வரவால் ஓரம் கட்டப்பட்டார்.

மும்பையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்குறார். இருந்தும் இவரால் பெரிதாக வர முடியாததால் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய கோட் ஷூட் உடையில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

அம்மணியின் இந்த அழகிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவ்ளோவா அழகா இருக்குற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலையே என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.



