எப்படி இருந்த நீங்க இப்டி மாறிட்டிங்களே.. கீர்த்தி சுரேஷ் ஹாட் புகைப்படங்கள்!!

8408

கீர்த்தி சுரேஷ்..

அறிமுகமாகி சில வருடங்களிலேயே உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து கெத்து காட்டியவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்திகேயன், தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண், நாகர்ஜுனா என பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மகேஷ் பாபு திரைப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது.

அது எனோ தெரியவில்லை. அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் முன்னணி ஹீரோக்கள் படங்களாக இருந்தாலும் பிளாப் ஆகிவிடுகிறது. மேலும் , அவர் தேர்ந்தெடுத்து, முன்னணி வேடத்தில் நடித்த பெண் குயின், குட்லக் சாக்ஷி, மிஸ் இந்தியா ஆகிய படங்களும் சரியான வரவேற்பை பெறவில்லை.

அதனால், தற்போது முன்பு போல, அதிக படங்கள் வருவதில்லையாம். தற்போது அவர் கைவசம் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பூலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறாராம்.

இது போக தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க கீர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எந்த படம் கிடைத்தாலும் நடித்து விடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதற்கு காரணமாக ரசிகர்கள் கூறுவது என்னவென்றால், நன்றாக நடித்தால் மட்டும் போதாது. அந்த நல்ல நடிப்பை எந்த படத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற கதை ஞானம் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.