என்னது அந்த மாதிரி காட்சியில் நடிக்கனுமா? தெறித்து ஓடிய சீரியல் நடிகை!!

318

சீரியல் நடிகை..

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு என்றாவது ஒரு நாள் வெள்ளித்திரையில் நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அப்படி பலர் கனவுகளுடன் வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றியும் கண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பிரியா பவானி சங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோரை கூறலாம்.

இவர்களின் வரிசையில் தானும் ஒரு நாயகியாக ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு வெள்ளித்திரைக்கு வர முயன்றவர் தான் அந்த சீரியல் நடிகை. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பிரபலமான சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் அந்த நடிகை.

அவரதே கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அவரை சிலர் டிரோல் செய்து வந்தாலும் அவர் தனது பணியை திறம்பட செய்து வந்தார். இவர் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியலும் டிஆர்பியில் டாப் காரில் சென்று கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நடிகை திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருப்பதால் தான் சீரியலில் இருந்து விலகியதாக அந்த நடிகை விளக்கமும் அளித்திருந்தார். மேலும் அவர் கூறியதுபோலவே ஒரு படத்தில் நடிக்கவும் அந்த நடிகை ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்புக்கு சென்று பிறகுதான் அங்கு படுக்கை அறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று.

நடிகைக்கு விருப்பம் இல்லை என்றபோதும் படுக்கையறையில் காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் கட்டாயப்படுத்தினராம். இதனால் அந்த படத்திலிருந்து விலகிய நடிகை எந்த படத்திற்கு முயற்சி செய்தாலும் தொடர்ந்து இதுபோன்ற வாய்ப்புகளே வந்ததால் எனக்கு சினிமாவே வேண்டாம் என மிகவும் விரக்தியில் உள்ளாராம் நடிகை.