இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!!

1116

இருட்டு அறையில் முரட்டு குத்து 2..!

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த வருடம் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்கள் கிலுகிலுப்பாக்கிய படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

18 வயதை கடந்தோர் மட்டும் பார்க்கும் படமாக இப்படம் பல இரட்டை அர்த்த வசனங்களுடன் தியேட்டரில் கலக்கியது. பெரும் கூட்டம். வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் தற்போது சந்தோஷ் இறங்கியுள்ளார். இதில் அவரே ஹீரோவாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் டேனி, ரவி மரியா, சாம்ஸ்ம் விஜய் டிவி பிரபலம் டி.எஸ்.கே, ராஜேந்திரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.கரிஷ்மா மற்றும் அகிருதி என இரண்டு அறிமுக ஹீரோயின்கள் படத்தில் இணைந்துள்ளார்கள்.