ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

318

ஜான்வி கபூர்..

மறைந்த மயிலு நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் இளம் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தடக் திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

படத்தின் ப்ரோமோஷனுக்காகவும், முதல் படம் நல்ல முறையில் ஹிட் அடிக்கவேண்டும் எனவும் கருதி அந்த படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோவான இஷான் கட்டாரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்.

அதையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் ஜிம் ஒர்க் அவுட் செய்தும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.

ஆனால், தற்போது அழகிய சேலையில் அடக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். சேலை பாவடை தாவணி அணிய சொல்லி அவரது அம்மா அடிக்கடி கேட்பார் என ஒரு முறை ஜான்வி கபூர் கூறியிருக்கிறார்.

ஆக அம்மாவின் ஆசை நிறைவேற்றிய ஜான்விக்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்துள்ளனர்.