வேணாம்மா… உங்களுக்கு அதுதான் செட் ஆகும்… கேப்ரியல்லாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்!!

289

கேப்ரியல்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர்’ ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி அசத்தி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போட்டு சர்ச்சையில் சிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.

ஆனால், அது நடக்கவில்லை. மாறாக சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவரை தேடி வந்தது. தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், திடீரென நல்ல பொண்ணாக மாறி புடவை கட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த் சில ஜொள்ளு ரசிகர்கள் ‘புடவ வேணாம்மா…உனக்கு மாடர்ன் டிரெஸ்தான் செட் ஆகும்’ என பதிவிட்டு வருகின்றனர்.