ரஜினியுடன் நடிக்க பயம் : குஷ்பு!!

1639

ரஜினி – குஷ்பு..

சிவா இயக்கும் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ள குஷ்பு, ரஜினியுடன் இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என கூறியுள்ளார்.

தமிழில் ரஜினி – பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் தான் குஷ்பு அறிமுகமானார். அந்த படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக நடித்த அவர் பின்னர் மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிலையில், தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 168வது படத்தில் நடிக்கிறார்.

இதே படத்தில் மீனா, கீர்த்தி சுரேசும் நடிக்கிறார்கள். இந்தநிலையில் தனது டுவிட்டரில், டிசம்பர் 22-ந் தேதி முதல் ஐதராபாத்தில் நடக்கும் தலைவர் 168வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். இந்த படத்தில் நடிப்பது பயமாகவும், அதே சமயம் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ரஜினியுடன் மீண்டும் நடிப்பது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.