நடிகர்களுடன் காதலில் விழுந்து கடலில் கவுந்த நடிகைகள்.. யார் யார் தெரியுமா?

422

நடிகைகள்..

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் களமிறங்கும் தமிழ் திரைப்படங்களில் புது புது கதாநாயகிகள் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் இருந்தும் களம்இறங்கி வருகின்றனர். இதுவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இருந்தாலும், தமிழ் சினிமாவில் நல்ல நடிகைகள் தொடர்ந்து தங்கள் இருப்பை காட்டி கொண்டி தான் இருக்கின்றனர். ஆனாலும் அதில் சிலர் காதல் வலையில் விழுந்து தங்களது மார்க்கெட்டை சுத்தமாக இழந்து விடுகின்றனர்.

அப்படி காதலில் விழுந்து மார்க்கெட் இழந்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. இவர் ஆரம்பத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பின்னர் நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பலூன் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தனர். இந்த காதல் விவகாரத்துக்கு பின்னர் அஞ்சலியின் மார்க்கெட் சரிய தொடங்கியது. தற்போது தமிழை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

அடுத்ததாக நயன்தாரா, இவர் தற்போது உச்சத்தில் இருக்கிறார். ஆனாலும் ஆரம்ப காலகட்டங்களில் சிம்புவுடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டு, அடுத்ததாக நடன இயக்குனர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டார் இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர் என கூறப்பட்டது.

அந்த சமயம் நயன்தாரா தமிழ் சினிமா மார்க்கெட்டை சற்று இழந்திருந்தார். என்பதே உண்மை. அதன் பிறகு சுதாரித்து கொண்ட அவர், மீண்டும் தனது நடிப்பு திறன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

அடுத்து நடிகை அமலாபால், இவர் ஆரம்பத்தில் நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தபோதே இயக்குனர் A.L.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். பின்னர் இருவரும் இரண்டு வருடங்கள் கழித்து பிரிந்து விட்டனர்.

அதற்கு பிறகு, அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. ஆடை எனும் திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்தாலும், அதன்பிறகு எந்த ஒரு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது OTT படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதேபோல நடிகை திரிஷாவும் காதல் கிசுகிசுவில் பேசப்பட்டு உள்ளார். தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசு பேசப்பட்டு உள்ளார். அதன்பிறகு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல நடிகையாக உள்ளார்.