திடீர்னு கல்யாணம்னு சொன்னா எங்க நிலமை? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

508

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம். இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அசரடிப்பார்.

துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார். இந்நிலையில்,

திடீரென தனது இன்ஸ்டாகிராம் ஸ்ரோரி பக்கத்தில் ‘நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். செட்டில் ஆவதற்கு இதுதான் சரியான நேரம்.என் பெற்றோர்கள் சம்மதம் கூறிவிட்டனர். இது பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணம். காதல்லாம் செட் ஆகாது.

எனக்கு சினிமா பிடிக்கும். திருமணத்திற்கு பின்னும் அதில் இருப்பேன். உங்கள் ஆசிர்வாதஞ்கள் வேண்டும்’ என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இன்று முட்டாள் தினம் என்பதால் ரசிகர்களை ஏமாற்றவே விளையாட்டாக அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என கருதப்படுகிறது.