இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகை ஜெனிலியாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ!!

6704

ஜெனிலியா..

இன்னசென்ட் நடிகையாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து தன் நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை ஜெனிலியா. மும்பையை சேர்ந்தவரான இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கோலிவுட்டில் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியா ஹீரோயினாக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு புகழை தேடி தந்தது. அதன் பிறகு தன் துரு துரு நடிப்பால் தொட்டதெல்லாம் ஹிட் அடித்தார்.

சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பாக நடித்து சூப்பர் ஹீரோயினாக வலம் வந்த அவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு இரண்டு குழந்தைக்கும் அம்மாவாகி நடிப்புக்கு டாட்டா காட்டினார்.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோ , போட்டோ என வெளியிட்டு வரும் அவர் தற்போது கியூட்டான நடன வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அதில் அவர் தனது தோற்றத்திற்கு ஏற்ப ஒல்லி பெல்லி அழகில் ஸ்டெப் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)