கமல்.. ஷங்கர்.. காஜல் அகர்வால் மயிரிழையில் உயிர்தப்பினர் : விபத்தை நேரில் கண்டவர் அளித்த திகிலூட்டும் தகவல்!!

1031

நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோர விபத்தில் 3 பேர் ப லியாகியுள்ளனர். 9 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் நேற்றிரவு கிரேன் ஒன்று அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தின் போது சம்பவயிடத்தில் இருந்தவர் கூறியதாவது, நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினர் பலர் ம ரியிழையில் உயிர்தப்பினர். அவர்கள் கிரேன் அருகிலேயே இருந்தனர்.

கமலஹாசனின் மேலாளர் கிரேன் இடிந்து விழுவதைக் கண்டு அவர்களை எ ச்சரித்தால் அவர்கள் த ப்பினர் என கூறியுள்ளார்.