வெள்ளை நிற உடையில் அழகிய தேவதை போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

7970

ஐஸ்வர்யா ராஜேஷ்..

டஸ்கி ஸ்கின் அழகியாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி முழுக்க முழுக்க தனது திறமையால் முன்னேறி மார்க்கெட்டின் உச்சத்தை பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்த ஐஸ்வர்யா கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அப்படித்தான் அவரது திரைப்பயணம் துவங்கியது. 2010ம் ஆண்டு வெளியான நீதானா அவன் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் 2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.

தொடர்ந்து ரம்மி, காக்கா முட்டை, தர்மதுரை, வட சென்னை, கனா உள்ளிட்ட படங்கள் தொடர் ஹிட் அடித்தது. இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது வெள்ளை நிற உடையில் அழகிய தேவதை போன்று போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.