இதெல்லாம் ஒவரு… இப்படியெல்லாமா பண்ணுவிங்க? ரசிகர்களை முட்டாளாக்கிய கஸ்தூரி!!

1242

நடிகை கஸ்தூரி..

தமிழ் சினிமாவில் 80’ஸ் களில் பேசப்படும் நடிகையாக வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழில் ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோயினாக, காமெடி நடிகையாக, குணச்சித்திர நடிகையாக என எல்லா கோணங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், ரஜினி, கமல் என முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் குத்துவிளக்கு குத்துவிளக்கு எனும் ஒரு ஐட்டம் பாடலுக்கு கஸ்தூரியா இதுனு கேக்குற அளவுக்கு ஆடியிருப்பார்.

மேலும் சமூகம், அரசியல், சினிமா பற்றி தன்னுடைய கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டும் வருகிறார். இந்த நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாவில் கர்ப்பமாக இருக்குறமாதிரியான போட்டோவை போட்டு ஹாஸ்டேக்கில் மிஸ்டர் ப்ரக்னன்ட் என்றும் பதிவிட்டார்.

அதை பார்த்து ரசிகர்கள் ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இது மூனாவதா என ஆச்சரியப்பட்டனர்.மேலும் சில ரசிகர்கள் இருக்காது இது ஏதாவது படத்துக்கான கெட்டப்பா கூட இருக்கலாம் என கூறினர்.

ரசிகர்கள் சொன்னது போல “மிஸ்டர் ப்ரக்னன்ட்” என்னும் படத்துக்காக நான் பண்ணப்போற கதாபாத்திரத்துக்கான கெட்டப் என்றும் இதை ஏப்ரல் 1 முட்டாள் தினத்திற்கான புகைப்படம் என்றும் பதிவிட்டு ரசிகர்களை ஏமாத்தியுள்ளார்.