அந்த ஹீரோக்கூட தவறாக நடக்க சொன்னாங்க…. கசப்பான அனுபவங்களை பகிர்ந்த பிரபல நடிகை!!

2280

இஷா கோபிகர்..

திரையுலகில் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற விஷயம் பரவலாக காணப்படுகிறது. அதிலும் தற்போது ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அட்ஜஸ்ட் செய்ய கூறும் அளவிற்கு மிகவும் மோசமாக மாறி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த அளவிற்கு திரையுலகில் நாளுக்கு நாள் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக ஹீரோவுடன் படுக்க சொன்னதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகை வேறு யாருமல்ல தமிழில் என் சுவாச காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உள்ளிட்ட படங்களில் நடித்த இஷா கோபிகர் தான்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள இஷா தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திரையுலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசிய இஷா கோபிகர் கூறியதாவது, “சினிமாவில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட் செய்யக்கோரி வற்புறுத்தும் நிலைமை உள்ளது.

ஒரு படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமான சமயத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஒரு ஹீரோவின் பெயரை சொல்லி அவருடன் அட்ஜெஸ்ட் செய்ய கூறினார்.

நான் அந்த நடிகருக்கே போன் செய்தேன். அவர் என்னை தனியாக சந்திக்கும்படி கூறினார். நான் மறுத்துவிட்டேன். உடனடியாக தயாரிப்பாளரிடம் சென்று, நான் நடிக்கவே வந்திருக்கிறேன்.

நடிப்பை தவிர வேறு எந்த விஷயத்திலும் சமரசம் இல்லை என கறாராக பேசியதால் அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். இதுமட்டுமல்ல இதுபோல பல வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன்” என கூறியுள்ளார்.