நடிகை சாந்தினி வெளியிட்ட ஹாட் புகைப்படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள்!!

1304

சாந்தினி….

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் தான் நடிகை சாந்தினி. இவர் சித்து +2 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இருப்பினும் சாந்தினிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

தற்போது கூட அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர முன்னதாக சாந்தினி சில சீரியல்களிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாந்தினி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பதிவு செய்த புகைப்படத்தை கண்ட ரசிகர் ஒருவர் “உங்களுக்கு திருமணமாகி விட்டதா இல்லையா? உங்க கணவருடன் ஏன் போட்டோ போடுவதில்லை என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு பதிலளித்த சாந்தினி கூறியிருப்பதாவது, “தனிப்பட்ட வாழ்க்கையை தனியாக வைத்து கொள்ள வேண்டும். அதனால் தான்” என மிகவும் கூலாக சாந்தினி பதிலளித்துள்ளார்.

சாந்தினிக்கு திருமணமாகி விட்டதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. உண்மையில் அவருக்கு திருமணம் முடிந்து விட்டது. சாந்தினியும் அவரது நீண்ட நாள் காதலருமான நடன இயக்குனர் நந்தாவும் கடந்த 2018ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.