தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை குஷ்பு!!

1180

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நடிகையும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் திகதி முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேர்தல் தொடர்பாக தனது கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்த நடிகையும், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க முடியாது. நாம் ஒரு திட்டம் போட்டால் இயற்கை அதை கலைத்து விடுகிறது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.