அம்மா கேரக்டரில் நடிக்கும் நடிகை…. ஆனா இன்னும் அந்த அழகு குறையவே இல்ல!!

4929

மீரா ஜாஸ்மின்..

திரையுலகில் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே ஜொலிக்க முடியும். ஆமாங்க உண்மை தான் அழகும் இளமையும் இருக்கும் வரை மட்டுமே நடிகைகள் ஹீரோயின்களாக திரையில் ஜொலிக்க முடியும். அதில் துளி குறைந்தாலோ அல்லது திருமணம் முடிந்து விட்டாலோ அவ்வளவு தான்.

ஒரு சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த எத்தனையோ நடிகைகள் இன்று இருக்கும் இடம் கூட தெரியாமல் காணாமல் போனதுண்டு. தற்போதும் அதுபோல அழகு பதுமையாக வலம் வந்த நடிகை மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பின்னர் அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மாதனுடன் ரன், விஜய்யுடன் புதிய கீதை, விஷாலுடன் சண்டைக்கோழி என தமிழ் மலையாளத்தில் அடுத்தடுத்து டாப் நடிகர்கள் படங்களில் பிசியாக நடித்து வந்த மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பின் கடந்த ஆறு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், தற்போது மகள் என்ற மலையாள படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த படத்தில் மீரா ஜாஸ்மின் 19 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறாராம். இதுகுறித்து பேசிய மீரா ஜாஸ்மின் கூறியதாவது, “மகள் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் உங்கள் இமேஜ் பாதிக்காதா? என்று என்னிடம் கேட்கிறார்கள்.

அதுபற்றி நான் கவலைப்படவில்லை. கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. சினிமா முன்பை விட எதார்த்தமாக மாறியுள்ளது. நடிக்கும்போது இந்த மாற்றத்தை நான் கவனித்தேன்” என கூறியுள்ளார். ஆனால் ரசிகர்களோ இன்னமும் உங்களின் அழகு அப்படியே தான் உள்ளது என அவரை வர்ணித்து வருகிறார்கள்.