என்னங்க சொல்றீங்க மலர் டீச்சருக்கு கல்யாணமா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

23434

சாய் பல்லவி..

முகப்பருவால் அழகு கெட்டுவிடும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் முகப்பரு தான் தனக்கு அழகு என இயற்கை அழகால் பிரமேம் படத்தில் ரசிகர்களை வசீகரம் செய்தவர் தான் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக முன்னேறினார்.

தற்போது பிசியாக வலம் வரும் சாய் பல்லவி அடுத்ததாக மகேஷ் பாபுவின் புதிய படத்தில் அவரின் தங்கையாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் சாய்பல்லவி இதில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல் வேதாளம் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க வந்த வாய்ப்பை சாய் பல்லவி தட்டி கழித்து விட்டார். தற்போது வரை எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருப்பதால், சாய் பல்லவிக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் காட்டுத் தீ போல் பரவ தொடங்கியது.

இந்நிலையில் சாய் பல்லவியே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “தெலுங்கு சினிமாவில் எனக்கென தனி இமேஜ் உள்ளது. சாய்பல்லவி திருப்திகரமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன்” என திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதை கேட்டவுடன் தான் இளைஞர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஏனெனில் எந்தவித செயற்கை சாயமும் இன்றி இயற்கை அழகில் தேவதை போல் ஜொலிக்கும் சாய் பல்லவிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது குறிப்பிடத்தக்கது.