இப்படித்தான் உங்களுக்கு அடிக்ட் ஆனோம்… செம க்யூட் லுக்கில் கீர்த்தி சுரேஷ்!!

4043

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.

அவரும், இயக்குனர் செல்வராகவனும் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், செம க்யூட்டான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறார்.