எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களே? நடிகையின் போட்டோவை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!!

3335

கேத்ரின் தெரசா..

ஹீரோயின் என்றாலே ஸ்லிம்மாக பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் ஆசைப்படுகிறார்கள். மாறாக ஒரு நடிகை கொஞ்சம் வெயிட் போட்டு பார்க்க குண்டாக தெரிந்ததால் அவ்வளவு தான். அந்த நடிகையை ஆண்ட்டி ரேஞ்சுக்கு டிரோல் செய்து அவரை பங்கம் செய்து விடுவார்கள்.

தற்போது அப்படிதான் ஒரு நடிகை உடல் எடை அதிகரித்து ஆண்ட்டி போல தோற்றமளிப்பதாக ரசிகர்கள் ஃபீல் செய்து வருகிறார்கள். அந்த நடிகை வேறு யாருமல்ல மெட்ராஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா தான்.

இப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த கேத்ரின் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இறுதியாக விஜய் தேவரகொண்டா உடன் இவர் இணைந்து நடித்த வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற படம் வெளியானது.

ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்ததால், அதனை தொடர்ந்து கேத்ரினுக்கு பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது. தற்போது கைவசம் ஒரு படம் இல்லாத நிலையில், வாய்ப்புக்காக சமீபத்தில் கேத்ரின் போட்டோ ஷூட் ஒன்று நடத்தி புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

அதனை கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் போட்டோவில் அவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டது தான். பலரும் உங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆகிட்டீங்க? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர் ஒரு டைம்ல சிக்ஸ் பேக் வச்சிருந்த ஹீரோயின என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Bhala Thandanana Movie Actress Catherine Tresa Black Saree Pics