ரிஸ்க் எடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரல் வீடியோவால் கதிகலங்கிய ரசிகர்கள்!!

1664

ஐஸ்வர்யா ராஜேஷ்..

கனா,வடசென்னை போன்ற படங்களில் வித்தியாசமான ரோல் எடுத்து ரசிகர்களை பரவசப் படுத்தியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த படங்கள் எல்லாமே மக்களை வெகுவாக கவர்ந்து விடும். ஏற்று நடிக்கும் பாத்திரமும் படத்திற்கு படம் சற்றும் வேறுபட்டு தான் இருக்கும்.

அதனாலயே ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். பாப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போன்ற தோற்றத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடுவார். இந்த நிலையில் வத்திக்குச்சி பட இயக்குனர் கிங்ஸ்லி இயக்கும் ”டிரைவர் ஜமுனா” படத்தில் லீடு ரோலில் நடிக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்த படம் ஒரு கால்டாக்‌ஷியில் டிரைவராக இருக்கும் பெண்ணை மையமாக வைத்து எடுக்கும் படமாகும். அதனால் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால்டாக்‌ஷியில் பணிபுரியும் பெண்ணாக நடிக்கிறார். அதற்காக உண்மையிலயே கால் டாக்‌ஷியில் வேலைபார்க்கும் பெண்களை போய் சந்தித்து அவர்கள் பேசும் பாஷை,

எப்படி ஒரு நாளை சமாளிக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டாராம். மேலும் இந்த படத்தில் இவர் டூப் போடாமலயே காரை வேகமாக ஓட்டும் காட்சியில் இவரே வேகமாக ஓட்டியுள்ளாராம்.

இதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியடைந்து விட்டனராம். ஆனால் பத்திரமாக ஓட்டினாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படமும் இவருக்கு ஒரு கனா படத்தின் பெருமையைப் போலவே இன்னொரு பேரையும் வாங்கிக் கொடுக்கும் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.