30 ஆண்டுகளாக இளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை : வைரலான அவரது புகைப்படம்!!

986

30 ஆண்டுகளாக வெள்ளித்திரையில் வலம் வரும் தைவான் நாட்டு நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமானவர் Stephanie Siao.

அவரது ரசிகர்கள் பலர், முப்பது ஆண்டுகள் வெற்றிகரமான நடிகையாக ஆசிய வெள்ளித்திரையில் வலம் வந்தாலும் அவர் இளமையாகிக் கொண்டே போவதாக விமர்சிக்கிறார்கள்.

பிரபல நடிகைகளான Lucy Liu, Naomi Watts, Ashley Judd மற்றும் Kylie Minogue ஆகியோர் பிறந்த அதே 1968ஆம் ஆண்டில் New Taipei நகரில் பிறந்தவர் Siao. 20 வயதில் மொடலாக களமிறங்கிய Siao, 1989இல் ரொமாண்டிக் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் வெள்ளித்திரையில் பிரபலமான Siao, தைவானின் மிக அழகான பெண் என அழைக்கப்படுகிறார். ஆகஸ்டில் 51 வயதை எட்ட இருக்கும் Siao, சமீபத்தில் சாதாரண உடையில் ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் படங்கள் வைரலாகியுள்ளன.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

ஒரு ரசிகர், Siao பதின்ம வயது பெண்ணைப்போல் இருக்கிறார் என்று கூற, இன்னொருவர், அவர் இளமையாகிக் கொண்டே போகிறார் என்று கருத்து தெரிவிக்க, அந்த பக்கத்தை 310 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டார்கள்.

Siaoவின் அந்த படத்தைப் பார்த்து அதிர்ச்சியான ஒருவர், உண்மையாகவே அவருக்கு 51 வயதுதானா என்று கேட்க மற்றொருவர், 20 வயதுள்ள நிறைய ஆண்கள் அவரைப் பார்த்து மயங்கப் போகிறார்கள் என்கிறார்.