இப்படியும் கவர்ச்சி காட்டலாம்… மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

1223

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இடம் பிடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உச்ச மார்க்கெட்டை பிடித்துள்ளார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர்,

2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2, பென்குயின் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இடைவிடாமல் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை தக்கவைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார்.

இந்நிலையில் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி ஹீரோயின்களுக்கு இப்படியும் இருக்கலாம் என டீசண்டான லுக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.