கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பரத்தில் நடிக்காததிற்கு என் தங்கை தான் காரணம் : உண்மையை உடைத்த சாய் பல்லவி!!

1005

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாய் பல்லவி சமீபத்தில் ஒரு பேஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நான் என் தங்கையை விட நல்ல கலர், ஒரு சில நாட்கள் அவள் என்னுடன் கண்ணாடி பார்க்கும் போது என்னை விட அவர் கலர் கம்மி என்பதை உணர்ந்தாள்.

நானும் நிறைய வெஜிடேபுள் சாப்பிடு என்றேன், அதையும் அவள் செய்தால், அப்போது தான் தெரிந்தது கலர் என்பது ஒரு சிறு பிள்ளை மனதை எப்படி மாற்றுகிறது என, அதனாலேயே அதை ஊக்கப்படுத்துவது இல்லை’ என கூறியுள்ளார்.