சமீபத்தில் சிம்புவின் தம்பிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் திரையுலகிலும், உறவினர்கள் மத்தியிலும் சிம்புவின் திருமணம் எப்போது எனும் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது.
ஒரு மாதத்துக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சிம்பு திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவரது தந்தை டி.ராஜேந்தர், “அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்”, என கூறியிருந்தார்.
இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சிம்புவின் திருமணம் குறித்து புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது, தனது உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் சிம்பு திருமணம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.
விஷால் திருமணத்திற்கு முன்னதாகவே சிம்புவின் திருமணம் நடைபெறும் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.