பிக்பாஸ் சீசன் 3 ல் இந்த முக்கிய பிரபலங்களா : நிகழ்ச்சியில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம்!!

942

பிக்பாஸ் சீசன் 3 வரும் ஜுன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.

அண்மையில் இதில் கலந்துகொள்ளப்போகிறவர்கள் என சில பிரபலங்களின் பெயர்களும் வந்தது. இதில் ஆண் பெண் குரலில் பாடி அசத்தும் சாக்‌ஷியின் பெயரும் இருந்தது.

ஆனால் அது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி மீது சில எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தாலும் எதையாவது செய்து பரபரப்பை கூட்டி TRPல் இடம் பிடித்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் LGBTQ சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த ஐடியாவை கொண்டு தான் சாக்‌ஷி பெயரும் சொல்லப்பட்டதாம்.

தற்போது இந்த LGBTQ சமூகத்தில் இருந்து தர்மதுரை பட திருநங்கை ஜீவா சுப்ரமணியம், அருவி பட திருநங்கை எமிலி, சமூக ஊடகவியலாளர், சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருநங்கை கல்கியின் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.