தன் பெயரில் சமூக வலைத்தளத்தில் மோசடி : அதிர்ச்சியில் நடிகை மியா விளக்கம்!!

916

தமிழ் மற்றும் மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை மியா ஜார்ஜ். சின்னத்திரையில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் அவர்.

இந்நிலையில் அவரது பெயர் கொண்ட ஒரு சமூக வலைதள பக்கத்தில் மியா ஒரு படம் இயக்கப்போகிறார் என்றும், அதற்காக நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மேலும் மியாவுடன் சேட் செய்த ஸ்கீரீன்ஷாட்களும் வெளியானது.

இதை பார்த்து அதிர்ச்சியான நடிகை, “என்னுடைய பெயரில் போலி கணக்கு துவங்கி யாரோ தவறாக மோசடி செய்து வருகின்றனர். இதை யாரும் நம்ப வேண்டாம். நான் யாருடனும் சேட் செய்வதில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.