இது என்ன டிரெஸ்? ராஷ்மிகாவின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

579

ராஷ்மிகா மந்தனா..

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நாயகியாக அறிமுகமானவா். டோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஓ சாமி’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது. தற்போது விஜய் நடித்துவரும் நேரடி தெலுங்கு-தமிழ் படத்திலும் ராஷ்மிகா மந்தனாதான் கதாநாயகி.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். தனது இன்ஸ்டாவில் காதில் ஹெட் போன் மாட்டிகொண்டு நீலநிறத்தில் உடையணிந்து அனிமேஷன் மோட்டில் டிரெஸ் போட்டு உள்ள போட்டோவை பதிவிட்டி உள்ளார்.

முகம் மட்டும் வைத்து கொண்டு உடம்பு முழுவதும் கிராஃபிக்ஸ் பண்ணி உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளதை பார்த்து என்னம்மா டிரெஸ் இது? என்று ரசிகபெருமக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.