திடீரென புடவைக்கு மாறி க்யூட்டாக போஸ் கொடுத்த ஹன்சிகாவின் நச் கிளிக்ஸ்!!

3422

ஹன்சிகா..

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான், தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என அழைத்தனர்.

ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். பல ஹிட் படங்களில் நடித்தார். ஆனால், கடத சில வருடங்களாக அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் அவருக்கான வாய்ப்புகள் குறைய துவங்கியது.

தற்போதைக்கு சிம்புவுடன் ‘மகா’ என்கிற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். My name is shruthi என்கிற படத்திலும் நடித்துள்ளார். மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், உடல் இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், அவ்வப்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சி உடையில் போஸ் கொடுக்கும் ஹன்சிகா திடீரென புடவைக்கு மாறி க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.