அழகான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

1884

பிரியங்கா மோகன்..

டாக்டர் என்கிற ஒரே திரைப்படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.

முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் அவருக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. அதோடு, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின். அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல இவரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அழகான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.