பலே கில்லாடி சமந்தா.. நடிப்பை தாண்டி அந்த விஷயத்திற்கு தான் அதிக முக்கியத்துவம்.. ஓவர் கவர்ச்சிக்கு இதுதான் காரணமா?

559

சமந்தா..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. அதிக படங்களில் அவர் தற்போது நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் சமந்தா.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம், விவாகரத்து, அடிக்கடி இணையத்தில் போட்டோஷூட் ,புஷ்பா படத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் குத்தாட்டம் என அவ்வபோது ரசிகர்கள் மனதில தனது பெயரை பதித்து விடுகிறார் சமந்தா.

இவர் ஒரு படத்திற்கு சுமார் 3 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். ஆனால், அப்படி ஒரு படத்தில் நடிக்க சுமார் மூன்று மாத காலம் ஆகிறது. ஆனால் ஒரு சில மணி நேரத்திலேயே கோடிக்கணக்கான சம்பளத்தை அவர் பெற்று விடுகிறாராம். அவரை இணையத்தில், முக்கியமாக இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக இதனை வைத்து விளம்பரம் செய்து விடுகிறார். அப்படி அவர் சம்பாதிப்பதே கோடிக் கணக்கில் இருக்கிறதாம். அண்மையில் கூட உள்ளாடை விளம்பரத்தில் நடித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர் சமந்தா.

ஆதலால் தற்போது சமந்தா, படங்களில் நடிப்பதற்கான கதை கேட்பதைவிட, புதுப்புது விளம்பரங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளாராம். அதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக பணம் ஈட்ட முடியும் என்று அவர் நம்புகிறாராம்.