ரெட் லைட் ஏரியாவுக்கு போக போறேன்.. பகீர் கிளப்பிய ஹாட் நடிகை!!

167

சோனு கௌடா..

கன்னட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சோனு கௌடா. பல்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் சோனு கௌடா. இவர் அடுத்த ஒரு படத்திற்காக மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அது வேறு ஒன்றுமல்ல பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்தான். அந்த படத்திற்கு குட் குட்டர் குடெஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்காக இயக்குனர் யுவதீரா, மற்ற நடிகைகள் நடித்திருந்த விலைமாது கதாபாத்திரம் பற்றிய பல்வேறு திரைப்படங்களை பரிந்துரைத்து,

இதனை பார்த்து நீங்கள் விலைமாது எப்படி நடந்துகொள்வார்கள் என தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். ஆனால், கௌரி அதனை முற்றிலும் மறுத்து விட்டாராம். அந்த நடிகைகளை பார்த்து நான் நடிப்பு கற்று கொண்டால், அந்த நடிகைகளின் சாயல் மட்டுமே வரும்.

அதனால் நான் ஒரிஜினல் ஆகவே பாலியல் தொழிலாளிகள் அதிகம் இருக்கும், ரெட்லைட் ஏரியாவுக்கு செல்கிறேன். அங்கு அவர்களின் பழக்க வழக்கங்களையும், பாவனைகளையும் கற்றுக்கொண்டு, பிறகு இந்த படத்தில் நடிக்கிறேன். என்று தெளிவாகக் கூறி விட்டாராம்.

ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்யும் சோனு கௌடாவின் அர்ப்பணிப்பை பார்த்து கன்னட திரையுலகம் வியந்து நிற்கிறதாம். இந்த திரைப்படம் மூன்று கதைகளை கொண்ட ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக உருவாக உள்ளதாம்.